< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மாதிரி நடத்தை விதியா.. மோடியின் நடத்தை விதியா..? மம்தா பானர்ஜி கடும் தாக்கு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மாதிரி நடத்தை விதியா.. மோடியின் நடத்தை விதியா..? மம்தா பானர்ஜி கடும் தாக்கு

தினத்தந்தி
|
7 May 2024 6:12 PM IST

மோடியும், பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களும் தங்கள் வெறுப்பு பேச்சால் தாழ்த்தப்பட்ட இந்துக்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி பேசினார்.

புருலியா:

மேற்கு வங்காள மாநிலம் புருலியாவில் நடத்ந பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் -மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியும், பிற பா.ஜ.க. தலைவர்களும் தங்களை மட்டுமே இந்துக்களாக கருதுகிறார்கள். மற்ற சமூகங்களைப் பற்றி அவர்கள் நினைக்கவில்லை.

மோடியும், பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களும் தங்கள் வெறுப்பு பேச்சால் தாழ்த்தப்பட்ட இந்துக்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டன. எனவே, மாதிரி நடத்தை விதியின் பெயரை மோடியின் நடத்தை விதி என மாற்றிவிடலாம். ஆனால், மக்களின் உரிமைகளுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்