மதுரையில் வெற்றி: சு.வெங்கடேசனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
|மதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியுள்ளார்.
சிதம்பரம்,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியுள்ளார். 20-ம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் சு.வெங்கடேசன் 4,11,164 வாக்குகள் பெற்று 1,97,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 2,13,173 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை தொகுதியின் வெற்றிக்கு சு.வெங்கடேசனுக்கு இனிப்பு ஊட்டி தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்தார்.