< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி ஆதரவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி ஆதரவு

தினத்தந்தி
|
17 March 2024 9:59 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக மருத நாட்டு மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. தேர்தலையொட்டி அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மருத நாட்டு மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று மருதநாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பனை. ராஜ்குமார் தலைமையில், அக்கட்சியின் செயலாளர் திரு. செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்