< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
மனோகர் லால் கட்டார் வேட்பு மனு தாக்கல்
|6 May 2024 3:56 PM IST
அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், கர்னால் மக்களவைத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
கவுகாத்தி,
அரியானாவில் கர்னால் உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், அரியானா மாநிலத்தின் கர்னால் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியும் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து நயாப் சிங் சைனியும் கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.