< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது
நாடாளுமன்ற தேர்தல்-2024

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது

தினத்தந்தி
|
9 April 2024 1:34 PM IST

கடலுார் தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு இருந்த கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு சம்மதித்த தங்கர்பச்சான் அங்கு அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார். இதில் கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்