< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
மல்லிகார்ஜுன கார்கே சொந்த ஊரில் இன்று பிரசாரம்
|29 April 2024 9:15 AM IST
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான கலபுரகியில் இன்று பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் கலபுரகியில் குருமிட்கல், சேடம், கமலாப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். வருகிற 1-ந் தேதி அவர் ராய்ச்சூர், யாதகிரி, ஜேவர்கி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரசார் செய்து வருகிறார்கள்.