< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மராட்டிய மாநிலம்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மராட்டிய மாநிலம்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
27 March 2024 12:36 PM IST

மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. இதன்படி, 48 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து உத்தவ் தாக்கரே அணி பிரிந்தபோது, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவித்த 5 எம்.பி.க்கள் அரவிந்த சாவந்த்(தெற்கு மும்பை), ராஜன் விச்சாரே(தானே), விநாயக் ராவத்(ரத்னகிரி-சிந்து துர்க்), ஓம்ராஜ் நிம்பல்கார்(தாராசிவ்) மற்றும் சஞ்சய் ஜாதவ்(பர்பானி) ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை வடகிழக்கு தொகுதியில் சஞ்சய் பட்டீல், மும்பை வடமேற்கு தொகுதியில் அமோல் கிர்திகார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேட்பாளர் பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர் சந்திரகாந்த் கைரேவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதோடு நரேந்திர கேடேகார், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் வாக்சோரே உள்ளிட்டோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்