< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்

தினத்தந்தி
|
19 April 2024 8:23 PM IST

அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 2 பேர் மீது தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி புகார் அளித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக 5 தொகுதிகளில் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார், பா.ஜ.க.வைச் சேர்ந்த மங்கேஷ் சவான் மற்றும் சந்திரகாந்த் பட்டீல் ஆகிய மூவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி புகார் அளித்துள்ளது.

இவர்கள் மூவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசின் நிதிகளை மக்களுக்கு விநியோகம் செய்வதாக வாக்குறுதி அளித்து வருவதாகவும், அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் மக்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்வதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்