மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் மனைவி டிம்பிள் வேட்புமனு தாக்கல்
|3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மந்திரி ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் டிம்பிள் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் பாஜகவை தேற்கடிக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். இன்று, நாடு 1.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அரசுக்கு வருமானம் இல்லை. அவர்களால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்றார்.