< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: குஜராத்தில் சோனியா, ராகுல், கார்கே உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: குஜராத்தில் சோனியா, ராகுல், கார்கே உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்

தினத்தந்தி
|
24 April 2024 12:50 AM IST

குஜராத்தில் காங்கிரசின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா, ராகுல், கார்கே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ந் தேதி நடக்க உள்ளது. குஜராத்தில் மே 7-ந் தேதி 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் பிரசார பயண திட்டம் வகுத்து அங்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

இதற்காக காங்கிரசை சேர்ந்த மேற்குறிப்பிட்ட மூவர் உள்பட 40 பேர் கொண்ட, நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அந்த கட்சி வழங்கியது. அந்த பட்டியலில் பிரியங்கா காந்தி, குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோகில், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ராஜஸ்தான் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் ஆகியோரின் பெயரும் அடங்கி உள்ளது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்