தாமரை மலரும்...தமிழ்நாடும் வளரும்.. பிரசாரத்தில் முழக்கமிட்ட நடிகை நமீதா
|வட சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும், பால் கனகராஜ் என்பவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை,
மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இங்கு, அ.தி.மு.க சார்பில் ராயபுரம் மனோ, தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.பி.,யாக உள்ள கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அமுதினி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வடசென்னை பா.ஜ.க. வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் நடிகை நமிதா ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
மீனவர்களுக்காக ரூ.39 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. எல்லோருக்கும் வீடுகள், பாத்ரூம் வசதி கட்டி கொடுத்திருக்கிறார்கள். நம் வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர், சட்டம் தெரிந்தவர், வார்டு கவுன்சிலர் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர், ஏழை மக்களுக்காக உதவி செய்தவர். நீங்கள் தைரியமாக நம்பி பால் கனகராஜிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பதற்காக தயாராக இருப்பார். தாமரை மலரும், தமிழ்நாடும் வளரும், ஜெய்ஹிந்த் என்றார்.