காங்கிரஸ் புகார்: மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
|முதல்-மந்திரியின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், கட்சி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் அரசு இல்லமான 'வர்ஷா' பங்களா மும்பை மலபார்ஹில் பகுதியில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அரசு பங்களாவில் அரசியல் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது என கூறப்படுகிறது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த சனிக்கிழமை வர்ஷா பங்களாவில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் தனது கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்திய காட்சிகள் செய்தி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகின.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணையம் முதல்-மந்திரி அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தென்மும்பை தேர்தல் அதிகாரி, முதல்-மந்திரியின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், வர்ஷா பங்களாவில் நடந்த கட்சி கூட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.