மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
|தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட உள்ளனர்
புதுடெல்லி,
மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 11.30மணிக்கு வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட உள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.