< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

தினத்தந்தி
|
12 April 2024 3:11 AM IST

மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணா வளைவு, சமாதானபுரம், பழைய கருப்பசாலை, அய்யம்பட்டி ரோடு, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் அன்பில் மகேஷ் பிரசாரம் செய்தார்.

அப்போது கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கினார். அப்போது அவர், "மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வரும் முதல்-அமைச்சரின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.



மேலும் செய்திகள்