< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
எடப்பாடி பழனிசாமி உடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
|19 March 2024 7:50 PM IST
கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினர், தங்களது கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.