< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தூத்துக்குடியில் கனிமொழி அமோக வெற்றி
நாடாளுமன்ற தேர்தல்-2024

தூத்துக்குடியில் கனிமொழி அமோக வெற்றி

தினத்தந்தி
|
4 Jun 2024 5:04 PM IST

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் காலை முதலே முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

கனிமொழி (திமுக) - 4,50,580 (3,23,355 வாக்குகள் முன்னிலை)

சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,27,225

ரொவினா ரூத்ஜேன் (நாதக) - 1,04,542

விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்) - 98,342

மேலும் செய்திகள்