< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? கமல்ஹாசன் விளக்கம்
|29 March 2024 8:12 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.
சென்னை,
தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.
இந்த பரப்புரையின்போது நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியதாவது,
ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம்.நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள் . ஆனால் அது தியாகம் அல்ல , வியூகம் . தமிழ்நாடு காக்கும் வியூகம். என தெரிவித்தார்.