< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகை
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகை

தினத்தந்தி
|
6 April 2024 3:40 PM IST

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நாளை மதுரை வருகிறார்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. .இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நாளை மதுரை வருகிறார்.விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து திருமங்கலத்தில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்