< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஒடிசாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஒடிசாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி

தினத்தந்தி
|
2 May 2024 10:04 AM IST

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அஞ்சனி ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மக்களவைத் தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சுதம் மார்ண்டி, பா.ஜனதாவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததார். ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கல்பனா முதல்-மந்திரி ஆவார் என்று கூறப்பட்ட நிலையில் சாம்பாய் சோரன் பதவியேற்றார்.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் ஹேம்ந்த் சோரனின் அண்ணியும் ஜார்கண்ட் சட்டப்பேரவை உறுப்பினருமான சீதா சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்