< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
|30 March 2024 5:48 PM IST
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதேவேளை, ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே, சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.