< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
'தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதைப் போல் இருக்கிறது' - திருச்செந்தூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
|13 April 2024 10:21 PM IST
ஏற்கனவே 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதைப் போல் இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-
"திருச்செந்தூர் மக்களை சந்தித்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகவே இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது, ஏற்கனவே கனிமொழியை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழந்து, நாங்கள் 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதைப் போல் இருக்கிறது."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.