< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அவர் என்ன ஜோதிடரா? - பிரதமரின் காங்கிரஸ் குறித்த விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதிலடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

'அவர் என்ன ஜோதிடரா?' - பிரதமரின் காங்கிரஸ் குறித்த விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதிலடி

தினத்தந்தி
|
14 May 2024 7:15 PM IST

பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா காந்தி, “அவர் என்ன ஜோதிடரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் நோக்கத்தில் முன்னேறி வருகிறது. உத்தர பிரதேச மக்கள் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்கள் வாழ்வை மாற்றிய மற்றொரு ஆட்சியை அவர்கள் பார்த்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி இந்த முறை மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "அவர் என்ன ஜோதிடரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ஜோதிடர் இல்லை. பிரதமர் மோடி ஜோதிடரா? எந்த கட்சி என்ன செய்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறுபவர்களிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது" என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்