நாடாளுமன்ற தேர்தல்-2024
உத்தர பிரதேசத்தில் இந்தியா புயல் வீசுகிறது; மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல்-2024

உத்தர பிரதேசத்தில் 'இந்தியா' புயல் வீசுகிறது; மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
10 May 2024 3:58 PM IST

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக மாட்டார் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நான் சொல்வதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள். நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக மாட்டார். உத்தர பிரதேசத்தில் 'இந்தியா' புயல் வீசுகிறது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்