< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - ப.சிதம்பரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
19 April 2024 12:48 PM IST

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை,

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது:-

எனது ஜனநாயக கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை நாங்கள் சீர் செய்து விடுவோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாரும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை, பாஜக கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்