< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்; பா.ஜ.க.விற்கு 220 இடங்கள் கிடைக்கும் - கெஜ்ரிவால்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'இந்தியா' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்; பா.ஜ.க.விற்கு 220 இடங்கள் கிடைக்கும் - கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
1 Jun 2024 8:48 PM IST

'இந்தியா' கூட்டணி 295 இடங்களிலும், பா.ஜ.க. 220 இடங்களிலும் வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பா.ஜ.க.விற்கு 220 இடங்கள் கிடைக்கும் என்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.க.விற்கு 220 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 235 இடங்களும் கிடைக்கும். 'இந்தியா' கூட்டணி வலிமையான மற்றும் நிலையான அரசாங்கத்தை உருவாக்கும். பிரதமர் பதவி குறித்து 4-ந்தேதி முடிவு செய்யப்படும்."

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்