< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
'மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும்' - துரை வைகோ
|9 April 2024 9:07 PM IST
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கிடைக்கும் என துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, ஸ்ரீரங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திருச்சி சோமரசம்பேட்டை, அல்லித்துறை, வயலூர், அதவத்தூர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரசாரத்தின்போது பேசிய துரை வைகோ, "மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கிடைக்கும். திருச்சியிலும், ஸ்ரீரங்கத்திலும் பல திட்டங்களை நிறைவேற்றலாம். திருச்சி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன்."
இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.