< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எழுச்சிமிக்க மக்களாட்சியை கொண்டு வருவோம்' - விஜய் வசந்த்
|4 April 2024 4:12 AM IST
தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை திரும்பப்பெற முயற்சி எடுக்கப்படும் என விஜய் வசந்த் தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை திரும்பப்பெறுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்த விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எழுச்சிமிக்க மக்களாட்சியை கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.