< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும் - கனிமொழி
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும்' - கனிமொழி

தினத்தந்தி
|
9 April 2024 8:50 PM IST

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

சென்னை புரசைவாக்கத்தில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 35 லட்சத்திற்கும் மேல் வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது பதவியில் இருக்கும் 44 பா.ஜ.க. எம்.பி.க்கள் மீது பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குகள் உள்ளன.

மணிப்பூரில் சுமார் ஆயிரம் பேர் 2 பெண்களை தெருவில் அவமானப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மணிப்பூரில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை. மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களையோ, அங்குள்ள மக்களையோ அவர் சந்திக்கவில்லை. இனியும் பா.ஜ.க.வின் ஆட்சி தொடர்ந்தால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலை நாடு முழுவதும் உருவாகும்."

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.



மேலும் செய்திகள்