< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

Image Courtesy : @AmitShah

நாடாளுமன்ற தேர்தல்-2024

'3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்' - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

தினத்தந்தி
|
13 April 2024 5:13 PM IST

தமிழ் மொழியில் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

கன்னியாகுமரி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அதன் ஒரு பகுதியாக தக்கலை பகுதியில் நடைபெற்ற வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்றார்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில், சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்து அமித்ஷாவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது;-

"தமிழ் பண்பாடு, மரியாதையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து பா.ஜ.க.வை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அயோத்தி ராமர் கோவில், சனாதன தர்மம் ஆகியவற்றை அவதூறாக பேசி தி.மு.க. இந்துக்கள் மனதைக் காயப்படுத்தியது. பா.ஜ.க. வெல்லும் 400 இடங்களில் பொன்.ராதாகிருஷ்ணனுடையதும் ஒன்றாக இருக்க வேண்டும்."

இவ்வாறு அமித்ஷா பேசினார்.


மேலும் செய்திகள்