"இந்தியாவை மீட்க வாக்களித்தேன்" - இயக்குநர் அமீர் பேட்டி
|மதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் வாக்களித்தார்
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் ,மதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,
சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன். நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது