< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஒரு தொகுதி கூட போதும் என்றேன், 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கினார்கள் - டி.டி.வி.தினகரன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'ஒரு தொகுதி கூட போதும் என்றேன், 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கினார்கள்' - டி.டி.வி.தினகரன்

தினத்தந்தி
|
20 March 2024 10:11 PM IST

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், "தொடக்கத்தில் எங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர் கூட்டணி கட்சிகள் சேர்ந்த பிறகு என்னிடம் இருந்து சில தொகுதிகளை கேட்டார்கள்.

நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எந்தெந்த தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிடும் என்பதை பா.ஜ.க. அறிவிக்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்