< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு பேட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு பேட்டி

தினத்தந்தி
|
19 April 2024 9:16 AM IST

அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

சென்னை,

சென்னை மதுரவாயல் நெற்குன்றம் ஆர்.எம்.பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்தபின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது; உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்