< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மேற்கு வங்காள தேர்தல்: பா.ஜனதா வேட்பாளரை கட்டித்தழுவிய கீர்த்தி ஆசாத்
நாடாளுமன்ற தேர்தல்-2024

மேற்கு வங்காள தேர்தல்: பா.ஜனதா வேட்பாளரை கட்டித்தழுவிய கீர்த்தி ஆசாத்

தினத்தந்தி
|
14 May 2024 2:44 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இவ்வாறு இரு கட்சிகளுக்கு இடையே கொதிநிலை நீடித்தபோதும், பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தும், பா.ஜனதா வேட்பாளர் திலிப் கோசும் கைகுலுக்கி ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர்.

தங்கள் தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற அவர்கள் ஒரு வாக்குச்சாவடியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இந்த அரிய நிகழ்வு நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் கோஷ், 'ஆசாத் உலக கோப்பையில் விளையாடியிருக்கலாம், ஆனால் என்னை எதிர்கொள்ளவில்லை. இந்தமுறை எனக்கு எதிராக களமிறங்கி இருக்கும் அவரை நான் வீழ்த்துவேன்' என்றார்.

மேலும் செய்திகள்