< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்

தினத்தந்தி
|
12 April 2024 10:21 PM GMT

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது,

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

.மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆளும்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்