< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.க.வில் இணைந்தார்
|24 March 2024 6:49 PM IST
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் ஆர்.கே.எஸ்.பதவுரியா பா.ஜ.க.வில் இணைந்தார். அதே போல் திருப்பதி முன்னாள் எம்.பி. வரபிரசாத் ராவும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.