எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும் - துரைவைகோ பேட்டி
|தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார்
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ கூறியதாவது,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம் தீப்பெட்டி. பாசிசத்தை எரிக்கும் சின்னம் தீப்பெட்டி. எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும். நாங்கள் எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவோம். கூட்டணி கட்சி தலைவர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் அனைவருமே தி.மு.க. வேட்பாளர் தேர்தலில் நிற்பதாக தான் எண்ணி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை போன்ற எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருக்கிறது. அதேபோல் தேர்தல் ஆணையத்திலும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருந்து வருகிறது. தேர்தலில் நிற்க பணம் இல்லை நிற்க முடியவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, மத்திய இணைமந்திரி எல்.முருகன் போன்றவர்களிடம் மட்டும் அதிகம் காசு உள்ளதா?. என கூறினார்.