< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் அதிகாரிகள் என்னை 24 மணி நேரமும் பின்தொடர்கின்றனர் - பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'தேர்தல் அதிகாரிகள் என்னை 24 மணி நேரமும் பின்தொடர்கின்றனர்' - பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன்

தினத்தந்தி
|
12 April 2024 8:08 PM IST

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என நீலகிரி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்தார்.

நீலகிரி,

தேர்தல் அதிகாரிகள் தன்னையே 24 மணி நேரமும் பின்தொடர்வதாகவும், நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் கூறியுள்ளார். இது குறித்து ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். என்னை 24 மணி நேரமும் பின்தொடர்ந்து வருகிறார்கள். எங்கள் வாகனத்தை சோதனையிட வேண்டும் என்றால் சோதனை செய்து கொள்ளட்டும்.

ஆனால் எனது முகத்திற்கு முன்னாள் 24 மணி நேரமும் கேமராவை வைக்கிறார்கள். இதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாவை பின்தொடர முடியுமா? அப்படி செய்தால் தி.மு.க.காரர்கள் கேமராவை உடைத்துப் போட்டு விடுவார்கள்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்