தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் - எம்.பி. கனிமொழி
|தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
சென்னை,
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்கு முன் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம். தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்.
தி.மு.க. செய்த சாதனைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது பட்டியலிட்டோம், அது பிரமிப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முதல்-அமைச்சர் கொண்டுபோவதற்கு வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியம். நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இருக்கக்கூடிய 1 தொகுதி உள்பட 40 தொகுதிகள் மட்டுமில்லை; நாடும் நமதே!. இவ்வாறு அவர் கூறினார்.