< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியாகிறது
|30 March 2024 3:11 PM IST
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அக்கட்சி உள்ளது.திருப்பூரில் சுப்பராயனும், நாகப்பட்டினத்தில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - 2024 வெளியீட்டு விழா நாளை (ஞாயிற்றுகிழமை )காலை 11 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.