< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
விஜய் வசந்த் வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்
|5 April 2024 9:02 PM IST
கன்னியாகுமரி தொகுதி முழுவதும் விஜய் வசந்த் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
கன்னியாகுமரி,
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியும் ஒன்றாகும். தற்போது கன்னியாகுமரி உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி அவர் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று விஜய் வசந்த் பிரசாரம் முடித்துக்கொண்டு தக்கலை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விஜய் வசந்தின் காரை முழுமையாக சோதனையிட்டனர்.
காரில் எந்த பொருட்களோ, பணமோ இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் விஜய் வசந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.