< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
நாடாளுமன்ற தேர்தல்-2024

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

தினத்தந்தி
|
12 April 2024 1:14 PM GMT

தென்காசி அருகே கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தென்காசி,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சங்கரன் கோவில் அருகே பரப்புரையை முடித்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்காசி அருகே கரட்டுமலை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் பணமோ, பொருளோ ஏதுவும் காரில் இல்லை. இதையடுத்து முழுமையான சோதனை முடிந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்