< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை
நாடாளுமன்ற தேர்தல்-2024

உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை

தினத்தந்தி
|
14 April 2024 6:44 PM IST

உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

ஊட்டி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பறக்கும்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபட்ட உள்ளார். உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்துள்ளார். நீட்டுக்கல் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் பணமோ?, பரிசு பொருளோ? எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபின் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக, ராமநாதபுரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரிலும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்