< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
|7 April 2024 9:49 AM IST
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
திருச்சி,
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் திருச்சி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.