< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
9 April 2024 3:20 PM IST

ராஜீவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். இதனிடையே ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அவரது உண்மையான சொத்துக்களுடன் பொருந்தவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களை சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்