< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான் பேச்சு
|4 April 2024 12:58 PM IST
தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். அப்பாவி மக்களிடம் பணத்தை பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில்லை. தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். எனக்கு விழும் வாக்கை தாமரைக்கு விழுவது போல் மாற்றி அமைக்க தொழில்நுட்பத்தால் முடியும்.
பல உலக நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு விட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்கு சீட்டுதான் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.