'மக்களவை தேர்தல் வளர்ச்சிக்கும், ஜிகாத்துக்கும் இடையிலான போட்டி' - அமித்ஷா பேச்சு
|மக்களவை தேர்தல் வளர்ச்சிக்கான வாக்கு மற்றும் ஜிகாத்துக்கான வாக்கிற்கு இடையில் நடக்கும் போட்டி என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் போங்கிர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"2024 மக்களவை தேர்தலானது ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடிக்கு இடையிலான தேர்தல். இது வளர்ச்சிக்கான வாக்கு மற்றும் ஜிகாத்துக்கான வாக்கிற்கு இடையில் நடக்கும் போட்டி. ராகுல் காந்தியின் 'சீன உத்தரவாதம்' மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'பாரதிய உத்தரவாதம்' ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்தல் நடைபெறுகிறது.
திருப்திப்படுத்தும் அரசியலை செய்துவரும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ். மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய கட்சிகள் ராம நவமி ஊர்வலத்தை நடத்த விடவில்லை. இவர்கள் 'ஐதராபாத் விடுதலை நாள்' (செப்டம்பர் 17) கொண்டாடவும் அனுமதிப்பதில்லை. இவர்கள் சி.ஏ.ஏ.வை எதிர்க்கின்றனர். மேலும் இவர்கள் ஷரியா, குரான் அடிப்படையில் தெலுங்கானாவை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.