< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
திருச்சியில் 5 ஆயிரம் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாடாளுமன்ற தேர்தல்-2024

திருச்சியில் 5 ஆயிரம் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
12 April 2024 10:21 PM IST

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 5 ஆயிரம் மாணவிகள் ஹீலியம் பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19-ந்தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சியில் 5 ஆயிரம் மாணவிகள் ஹீலியம் பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவிகள் 5 ஆயிரம் பேர் மூவர்ண ஆடை அணிந்து மைதானத்தில் ஒன்று கூடி ஹீலியம் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் தலைமையில் மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.



மேலும் செய்திகள்