< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி, மதுரையில் இன்று பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி, மதுரையில் இன்று பிரசாரம்

தினத்தந்தி
|
28 March 2024 8:03 AM IST

சிவகாசியில் விஜயபிரபாகரனையும், மதுரையில் டாக்டர் சரவணனையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.

சிவகாசி,

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தென்காசி தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.


பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வந்தார். சிவகாசியில் இன்று (வியாழக்கிழமை) தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த தொழிலதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இன்று மாலை பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பேசுகிறார். தொடர்ந்து கார் மூலம் மதுரை வருகிறார்.

அதை தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்னர் மதுரையில் இருந்து இரவு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்