< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் - நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
|30 May 2024 12:33 AM IST
தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே ஒடிசாவில் கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட வேண்டும். அந்தவகையில் வருகிற 1-ந் தேதி 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
ஆனால் இதையும் மீறி ஒடிசாவில் தனியார் டி.வி. சேனல் ஒன்று நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டது. மாநிலத்தில் கடைசி கட்ட நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
எனவே தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட அந்த டி.வி. சேனல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.