முதற்கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகம்: பிரதமர் மோடி
|முதற்கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நேற்று (ஏப்ரல் 19ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,
முதற்கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக பதிவானது. இதில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நேற்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துகள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.